தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பாடியநல்லூரில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்தார். “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்டம், மக்களின் எதிர்கால ஆசைகளையும் தேவைகளையும் நேரடியாக அறிந்து கொள்ளும் ஒரு மகத்தான முயற்சியாக உருவெடுத்துள்ளது.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டுக்குள் மேலும் வளர்ச்சியடைந்த, மக்கள் நலன் சார்ந்த மாநிலமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்த அதிமுக தற்போது உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.

முட்டுக்கட்டை போடுவதையே தனது முதல் வேலையாக பார்த்து ஆளுநர் செயல்பட்டு கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். கொடுத்த வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் கஜானாவை அதிமுகவினர் சுரண்டியதாக முதல்வர ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ஆட்சிக்கு வந்த போதும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: 2030ல் தமிழ்நாடு எப்படி இருக்கணும்..? உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் உரை
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தர முடியாது என அதிமுகவினர் கூறியதாகவும் ஆனால் அதனை செய்து காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம் என முதல் கையெழுத்திட்டதாகவும் குறிப்பிட்டு பேசினார். அதிமுக ஆட்சி காலத்தில் நிறுவனங்கள் 5 ஓடியதாகவும் 0 முறியடிக்க முடியாத சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் தனது பாலிசி எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளை உணர்ந்து பல நல்ல திட்டங்களை செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: உங்க கனவை சொல்லுங்க... புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!