வரும் 14ஆம் தேதி 1.30 பேர் கலந்து கொள்ளும் திமுக கூட்டம் நடைபெற இருப்பதாக துணை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். 75 ஆண்டுகளைக் கடந்து, தமிழர்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பது, கழக இளைஞர் அணி என்று கூறினார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளைத் திசையெங்கும் கொண்டு செல்லும் கருத்தியல் பணிகள் ஒருபுறம், கட்டமைப்பை வலுப்படுத்தி கழகத்தின் வெற்றிகளுக்குத் துணைநிற்கும் அரசியல் பணிகள் இன்னொருபுறம் என்று இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கிறது இளைஞர் அணி என தெரிவித்தார்.
மாநிலம், மாவட்டம், மாநகரம், பேரூர், ஒன்றியம், கிளை, வட்டம் என்று தமிழ்நாட்டின் எல்லாத் திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது கழக இளைஞர் அணி., வழக்கமான நிர்வாக அமைப்புடன் இந்த ஆண்டு இரண்டு புதிய முன்னெடுப்புகளையும் கழக இளைஞர் அணி மேற்கொண்டிருக்கிறது என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: GSDP வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன்... இதுதான் திராவிட மாடல்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!

நியமிக்கப்பட்ட 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற கழகத் தலைவர் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 14.12.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் திமுக வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். திமுக இளைஞரணி வடக்கு மண்டலத்தின் new Dravidian stock, you are welcome என வரவேற்று முதல்வர் வீடியோ வெளியிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் பேசிய போது I belong to the Dravidian stock என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு... அவ்ளோ அலட்சியம்..! இது தான் சமூகநீதியா என சீமான் கண்டனம்..!