இமாசலப் பிரதேசத்தில் உள்ள PM SHRI பள்ளி ஒன்றில் விண்வெளி தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தது யார் என கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் அனைவரும் நீல் ஆம்ஸ்ட்ராங் என ஒன்றாக இணைந்து பதிலளித்தனர். அதற்கு எம். பி. தனக்கு தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன்தான் என பேசியுள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாதவரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டிய வழியில் நாம் இருப்பதாக தெரிவித்தார்.

பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்க வேண்டும் என்றும் அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என்றும் கூறினார். பாஜக எம் பி பேச்சுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு எம்.பி பேசுற பேச்சா இது? விண்வெளிக்கு முதல்ல போனது அனுமனா! விளாசிய கனிமொழி..!
முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல என்று கூறினார். பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது என்றும் விமர்சித்து உள்ளார். நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே... எம்.பி சு.வெங்கடேசன் கடும் சாடல்