சென்னையில் கடந்த சில வாரங்களாக காகங்கள் கொத்து கொத்தாக இறக்கும் நிகழ்வு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த மர்மமான பறவை இறப்புகள் முதலில் அடையாறு பகுதியில், குறிப்பாக இந்திரா நகர் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் அதிகம் பதிவாகின. மரங்களில் இருந்து நேரடியாக விழுந்து இறப்பது, சில நாட்களில் திடீரென பல காகங்கள் செத்துக் கிடப்பது போன்ற காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின. சில இடங்களில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த இறப்புகளின் காரணத்தை கண்டறிய தமிழ்நாடு கால்நடைத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பூபால் நகரில் உள்ள ICAR ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக ஆபத்துள்ள H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பறவைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் இதுவரை பறவைக்காய்ச்சலால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக் கூடிய தகவலாக இருந்தாலும் கூட, எதிர்கால நோய்த்தொற்றைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.
இதையும் படிங்க: இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கும் திமுக... அஜித் கொலை விவகாரத்தில் நயினார் அதிருப்தி..!
இறக்கும் பறவைகளை யாரும் கைகளால் தொட்டு அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளைப் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்களை முடிந்த வரையில் பறவைகள் மற்றும் விலங்குகளின் நேரடி தொடர்பில் இருந்து பாதுகாக்க வேண்டுமெனவும், காய்ச்சல் சளி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுமாயின் மக்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!