தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் குறிப்பாக அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்டவை கொலை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்திருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் முதன்மையான வாதம், திமுக ஆட்சியில் அரசியல் கொலைகள், கட்சி நிர்வாகிகள் மீதான தாக்குதல்கள், பழிவாங்கல் கொலைகள் போன்றவை அதிகரித்திருப்பதாகும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது", "குற்றவாளிகளுக்கு எந்த பயமும் இல்லை" என்று குற்றஞ்சாட்டினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், "தமிழ்நாடு கொலைகளின் தலைநகரமாக மாறியுள்ளது" என்று கூறி, ஆளும் கட்சியினருடன் தொடர்புடைய சில சம்பவங்களை சுட்டிக்காட்டினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்றோர் குழந்தைகள் மீதான குற்றங்கள், பெண்கள் மீதான வன்முறைகள் ஆகியவை அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் நெல்லை, சிவகங்கை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நடந்த படுகொலைகளை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாமிரபரணி பகுதிகளைக் கொலைகளின் கூடாரமாக திமுக அரசு மாற்றிவிட்டதாக தெரிவித்தார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் முப்பது படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது என்றார்.
இதையும் படிங்க: திமுககாரங்களுக்கு பெண்கள் வெறும் சதை பிண்டங்களா? FLIGHT- ல் அத்துமீறிய திமுக கவுன்சிலர்... நயினார் தாக்கு..!
தமிழர் நாகரிகத்தின் தொட்டிலான தாமிரபரணி நதிக்கரை பகுதிகளைக் கொடூர கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் திமுக அரசின் ஒரே சாதனை என்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிதைத்து சீரழிய விடும் திமுக அரசை, வரும் தேர்தலில் தயவுதாட்சண்யமின்றி தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்ற திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லாத்தையும் கொன்னுட்டு... "வெல்வோம் ஒன்றாக" வேற..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!