தமிழக மக்கள் தாகத்தில் தவிப்பதாகவும் தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனவும் நயினார் வலியுறுத்தி இருக்கிறார். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வர் விஜய் மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலை தொடர்வது கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஏரி, குளங்கள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்ட நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக வெற்றி கழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதே மக்கள் தாகத்தில் தவிக்க முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் மக்களை மறந்துவிட்ட முதல்வர் விஜயின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியாவது விழித்துக்கொண்டு மக்களின் தாகம் தீர்க்க ஆழ்துழைக் கிணறுகள் அமைப்பது மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவது போன்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: FCRA-க்கு எதிராக தனித்தீர்மானம் - இது தேவையற்ற விளம்பர நாடகம்!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!
மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேகதாது விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை ஏற்பட்டு விடக்கூடாது என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!