கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்ட அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியானது. கூட்டணி குறித்த அறிவிப்பை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
அமித் ஷா கூட்டணி ஆட்சி தொடர்பாக பேசி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சி என்பதை மறுத்துள்ளார். இருந்தாலும் அமித் ஷாவின் பேச்சு நிலையாக இருக்கிறது. கூட்டணிக் கொள்கையிலேயே குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கடந்த சட்டமன்ற தேர்தலில் 18 சதவீதத்திற்கும் மேல் பாஜக வாக்குகள் வாங்கி இருந்தது., நம்ம கூட்டணியான ஏடிஎம்கே 21 சதவீத வாக்குகள் வாங்கி இருந்தார்கள். இரண்டையும் கூட்டிப் பார்த்தாலே 30% வாக்குகளை மிக எளிமையாக பெற்றுக் கொண்டிருக்கிறோம். வருங்காலத்தில் நமது பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமைய உள்ளது என கூறினார்.
இதையும் படிங்க: ஜனநாயக பட ஊழலை ஒழிச்சுட்டு பேசுங்க விஜய்! அதிமுக யார் கிட்ட இருக்குன்னு தெரியனுமா? சிங்கை ராமச்சந்திரன் பதிலடி
இந்த நிலையில், கூட்டணி ஆட்சி குறித்து இபிஎஸ் தான் முடிவு எடுப்பார் என நயினார் நாகேந்திரன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறினார். தனித்து ஆட்சி என்ற இபிஎஸின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நயினார் பேசியுள்ளார். கூட்டணி ஆட்சி குறித்து இபிஎஸ் தான் முடிவு எடுப்பார் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதையும் படிங்க: "வழக்குப் பதிவு பண்ணுங்க..." - எடப்பாடி பழனிசாமியால் அவதிக்கு ஆளான மக்கள் ஆவேசம்..!