நெல்லை புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறுவர்களும் சினிமாவை பார்த்து சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ் பி பிரசன்ன குமார் கூறியதாவது, நேற்று மாலை 6:30 மணி அளவில் மூன்று இளைஞர்கள் மானூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எஸ்ஐ ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட 3 பேரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்ற காரணத்தினால் அவர்களின் அடையாள அட்டை மற்றும் பெற்றோர்களை அழைத்து வர காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
அதே 3 சிறுவர்கள் இரவு 9.30 மணிக்கு மீண்டும் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராமையன்பட்டி புற காவல் நிலையத்தில் பெட்ரோலை நிரப்பி ஒரு பாட்டிலில் வீசிவிட்டு தீயை பற்ற வைக்க முயற்சி செய்து உள்ளனர்.
இதையும் படிங்க: "போலீஸ் மேல கோபம்"..! நெல்லையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..! 3 சிறார்கள் சரண்..!
பின்னர் இன்று காலையில் 3 இளம் சிறார்களையும் கையகப்படுத்தி மூன்று பேரையும் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 பேருக்கும் முன் வழக்குகள் எதுவும் இல்லை.தவறுகளை மூன்று பேர் ஒப்புக்கொண்டு உள்ளார்கள். மூன்று பேரும் 10ம் வகுப்பு வரை படித்து கூலி வேலை செய்து வருகிறார்கள்.சினிமா படத்தில் பார்த்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மூன்று பேரும் கூறுகிறார்கள்.
சினிமா படம் பார்த்து தான் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவே தெரிவிக்கிறார்கள். சிக்கிய மூன்று பேரும் 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை இவர்களின் தேர்வு முடிவு வெளியாக இருக்கிறது. சிறுவர்களுக்கு மது விற்பனை செய்தால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் ஊழியர்களாக இருக்கலாம் வாங்கி கொடுப்பவர்கள் யாராக வேண்டுமானால் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது கொடுப்பவர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் 64 இடங்களில் ஜாதி ரீதியான அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!