கோவையைப் பொறுத்தவரை, கடந்த ஒரு வார காலமாகவே மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்றைய தினம் பகலிலும் மழை பெய்திருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் காலை முதலே பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வரும் சூழலில், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை யாரும் நடத்தக் கூடாது என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை மாணவன் தற்கொலைக்கு இதுதான் காரணமா?... வகுப்பறையில் வைத்து 2 மாணவர்கள், ஆசிரியர் செய்த கொடூரம்...!
இந்தச் சுற்றறிக்கை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை மாணவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இன்றைய தினம் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அறிவுறுத்தலுடன் இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் அரசு பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் நேரடி அல்லது இணையவழி சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING கோவையில் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலையில் திடீர் திருப்பம்... பள்ளியில் சாதி ரீதியாக தொல்லையா?