பாஜக கூட்டணியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஓ பன்னீர்செல்வம் அந்த கூட்டணியிலிருந்து விலகினார். பாஜக அவரை புறக்கணிப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், தனது முடிவை அறிவித்தார் ஓபிஎஸ். பிரதமர் மோடியை சந்திக்க தன்னிடம் நேரம் கேட்டிருந்தால் வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று நயினார் நாகேந்திரன் சொல்ல, அவரை பலமுறை நான் அழைத்தேன் கண்டுகொள்ளவில்லை என்று ஓபிஎஸ் ஆதாரப்பூர்வமான தகவலை கொடுத்திருந்தார். இப்படி போய்க்கொண்டிருக்க ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து விலகுவதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்று டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் Ttv தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேற நான் காரணமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் TTV தினகரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என கூறினார். எப்போதும் TTV சார் என்று தான் கூப்பிடுவோம்.., அந்த மரியாதை எப்போதும் இருக்கும் என் பேசினார்.

மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த நயினார் நாகேந்திரன் தயாராக இருப்பதாக கூறிய நிலையில் இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவருடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும் செங்கோட்டையின் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், செங்கோட்டையன் எடுக்கும் முயற்சிக்கு தனது முழு ஆதரவு இருப்பதாகவும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆஹா! இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே... செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டி குஷியை வெளிப்படுத்திய OPS ஆதரவாளர்கள்
இதுவரை செங்கோட்டையன் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை என்றும் பத்து நாட்கள் கெடு விதித்துள்ளார்., அந்த கெடு முடிந்த பிறகு அனைவரையும் அழைத்துப் பேசுவார் என எதிர்பார்ப்பாக தெரிவித்தார். உறுதியாக செங்கோட்டையனை தான் சந்திப்பேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: என்னப்பா நடக்குது? செங்கோட்டையன் வீட்டின் முன்பு திரளும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!