தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்தில் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே தூத்துக்குடி விமான நிலையத்தில் இரண்டு நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தில் இதுவரை 1350 மீட்டர் அளவில் இருந்த விமான ஓடுதளமானது 3000 மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாது ஐந்து விமானங்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விரிவாக்க பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்ல உள்ளது. இந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை வரும் 26 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதன் காரணமாக விமான நிலைய முகப்பு பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்ட வருகின்றன.

நிகழ்ச்சியை 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர், 4500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்.
இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல கெளம்புங்க... தேசிய கல்விக் கொள்கையை எப்போதும் எதிர்ப்போம்... அன்பில் மகேஷ் உறுதி!
இதனிடையே பிரதமர் மோடியின், தூத்துக்குடி வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரதமரின் வருகையை ஒட்டி தூத்துக்குடியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பாதுகாப்பு மற்றும் நவீன தொலைத்தொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையும் படிங்க: DMK 2.0 ஆட்சி தரமா இருக்கும்..! விரைவில் தமிழகம் முதலிடம்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி..!