மாலத்தீவுல நடந்த சமீபத்திய நிகழ்வுகள் இந்தியா-மாலத்தீவு உறவுல ஒரு பெரிய திருப்புமுனையைக் காட்டுது. பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பயணத்தை முடிச்சுட்டு, இப்போ மாலத்தீவுக்கு இரண்டு நாள் பயணமா (ஜூலை 25-26, 2025) சென்றிருக்கார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மோடிக்கு மாலேல உற்சாகமான வரவேற்பு கொடுத்திருக்கார்.
இது மோடியோட மூணாவது மாலத்தீவு பயணம், ஆனா முய்சு ஆட்சிக்கு வந்த பிறகு எந்த நாட்டு தலைவரும் முதல் முறையா வர்ற பயணமா இது இருக்கு. நாளை (ஜூலை 26) மாலத்தீவோட 60வது சுதந்திர தின விழாவுல மோடி சிறப்பு விருந்தினரா கலந்துக்கப் போறாரு. இது இந்தியா-மாலத்தீவு உறவு தொடங்கி 60 வருஷமாகுறதையும் கொண்டாடுற ஒரு முக்கியமான தருணம்.
சில மாசங்களுக்கு முன்னாடி இந்தியா-மாலத்தீவு உறவு ரொம்பவே சிக்கலா இருந்துச்சு. 2023-ல முய்சு, “இந்தியா வெளியேறு”னு ஒரு கடுமையான பிரச்சாரத்தோட ஆட்சிக்கு வந்தவர். 2024 ஜனவரில மோடி லட்சத்தீவுக்கு சுற்றுலா போனபோது, மாலத்தீவு அமைச்சர்கள் மூணு பேர் (மரியம் ஷியுனா, மால்ஷா ஷரீப், மஹ்ஸூம் மஜித்) மோடியை “கோமாளி”, “பயங்கரவாதி”னு சமூக வலைதளங்கள்ல விமர்சிச்சு, பெரிய சர்ச்சையைக் கிளப்பினாங்க.
இதையும் படிங்க: ஆட்சி, அதிகாரத்தில் புதிய மைல்கல்.. இந்திரா காந்தியை முந்தினார் பிரதமர் மோடி!!
இதனால இந்தியாவுல “#BoycottMaldives”னு ஒரு பெரிய இயக்கமே உருவாச்சு. இந்திய சுற்றுலா பயணிகள், குறிப்பா பிரபலங்கள், லட்சத்தீவு, அந்தமான் போன்ற இடங்களுக்கு போக ஆரம்பிச்சாங்க. மாலத்தீவுக்கு இந்தியர்கள் வர்றது 2023-ல முதல் இடத்துல இருந்து 2024-ல ஆறாவது இடத்துக்கு இறங்கிடுச்சு.
சுற்றுலாவை நம்பி இருக்குற மாலத்தீவு பொருளாதாரம் பெரிய அடி வாங்குச்சு. மாலத்தீவோட வெளிநாட்டு பண இருப்பு (foreign exchange reserves) 440 மில்லியன் டாலரா இருக்குற நிலையில, இது ஒரு மாநில இறக்குமதிக்கு கூட போதாதுனு மூடிஸ் நிறுவனம் எச்சரிச்சது.

இந்த சூழல்ல முய்சு, இந்தியாவோட உறவை சரிசெய்ய முடிவு பண்ணார். 2024 ஜூன்ல மோடியோட பதவியேற்பு விழாவுக்கு வந்தார். அக்டோபர்ல இந்தியாவுக்கு அரசு பயணமா வந்து, “இந்தியா-மாலத்தீவு விரிவான பொருளாதார மற்றும் கடல் பாதுகாப்பு கூட்டு” திட்டத்தை உருவாக்கினார்.
இந்தியா, மாலத்தீவுக்கு 150 மில்லியன் டாலர் கடனையும், 750 மில்லியன் டாலர் நாணய பரிமாற்ற உதவியையும் கொடுத்து, பொருளாதாரத்தை மீட்க உதவியிருக்கு. முய்சு, மோடியை விமர்சிச்ச அமைச்சர்களை இடைநீக்கம் பண்ணி, பிறகு அவங்க ராஜினாமா செய்ய வைச்சார்.
மோடியோட இந்த பயணம், இந்த உறவை மேலும் வலுப்படுத்துறதுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. மாலே நகரமே இந்தியக் கொடிகளால அலங்கரிக்கப்பட்டு, “மோடிக்கு உற்சாக வரவேற்பு”னு பேனர்கள் வைக்கப்பட்டிருக்கு. முய்சு, இந்திய சுற்றுலாப் பயணிகளை மறுபடி வரவேற்க ஆரம்பிச்சிருக்கார்.
இந்தியாவும், UPI கட்டண முறையை மாலத்தீவுல அறிமுகப்படுத்தவும், கடல் ஆராய்ச்சி, பாதுகாப்பு பயிற்சிகளை மேம்படுத்தவும் முடிவு பண்ணியிருக்கு. மோடியோட இந்த வருகை, மாலத்தீவோட பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், இரு நாடுகளுக்கும் இடையில நீண்டகால நட்பை வலுப்படுத்தவும் ஒரு பெரிய அடியாக இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
இதையும் படிங்க: பிரிட்டன் இளவரசருக்கு மோடி கொடுத்த கிப்ட்.. லண்டன் பயணத்தின் ஹைலைட்!