சென்னை ஓட்டேரி பகுதியில் ஒரு பெண் தன் கணவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒருவர் தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது அந்த பெண் திரும்பி பார்த்தபோது ஆபாச சைகை காட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதிமுகவில் நிர்வாகியாக இருக்கும் பெண் ஒருவரிடம் அத்துமீறிய அந்த நபர் பி2 காவல் நிலைய காவலர் தினேஷ் என தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணிடம் அவர் மிகவும் திமிர்தனமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் ஓட்டி வந்த வாகனத்தில் நம்பர் பிளேட் கூட இல்லை என தெரிகிறது.

தான் ஒரு கட்சியில் இருப்பதாகவும் தான் ஒரு வழக்கறிஞராக இருப்பதாகவும் தனக்கே இந்த நிலை என்றால்...பொதுமக்கள் நிலை என்ன என்றும் தன் கணவருடன் செல்லும் போது இப்படி நடந்து கொண்டார்.., தனியாக சென்றிருந்தால் என்னெவெல்லாம் செய்திருப்பார் என கூறினார்.
இதையும் படிங்க: உயிரை கையில் பிடிச்சுட்டு இருக்கணுமா? வெட்கமா இல்லையா? ஸ்டாலினுக்கு இபிஸ் சுளீர் கேள்வி..!

இது தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில், காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உதவி ஆணையர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணிக்கு பிறகு.. முதல்முறையாக கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்... முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்!