அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கே வி குப்பம் தொகுதி ஒதுக்குவதாக கூறி இருந்தார். பூவை ஜெகன்மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், 2021 சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வுமாவார்.
அந்தத் தேர்தலில் அவர் தனது தொகுதியில் வலுவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுகவுடனான கூட்டணியின் மூலம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றார். இப்போது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியின் கட்சிக்கு வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்ட சமயத்தில், இந்த ஒதுக்கீடு பூவை ஜெகன்மூர்த்தியிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிருப்தியில் பூவை.ஜெகன் மூர்த்தி அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா என்பது குறித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக 1 தொகுதி ஒதுக்கி இருப்பதால் அதிருப்தியில் இருக்கும் பூவை .ஜெகன் மூர்த்தி இன்று அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் கூட்டி அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா என்பது குறித்து அறிவிக்க உள்ளார்.
இதையும் படிங்க: வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலையாரை தரிசித்த சௌமியா அன்புமணி... மனமுருகி வழிபாடு..!!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி அவர் கேட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அதிமுக அந்த தொகுதியும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு பதிலாக சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதி ஒதுக்குவதாக சமாதானம் பேசி இருந்த நிலையில் ஐந்து தொகுதிகள் கேட்டிருந்த நிலையில் மூன்று தொகுதிகள் அளிப்பார்கள் என்று நம்பி இருந்த ஜெகன் மூர்த்திக்கு அதிருப்தி மட்டுமே மிஞ்சியது. இன்று பூவை.ஜெகன் மூர்த்தி நாளை ஆண்டரசன்பேட்டை முகாம் அலுவலகத்தில் உயர்மட்ட குழு கூட்டம் 3 மணியளவில் கூட்டியுள்ளார். அக்கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து கேட்டு அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா அல்லது வெளியேறுவதாக குறித்து முடிவு செய்ய உள்ளார்.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்...!! மிஸ் பண்ணிடாதீங்க...!!