ஜெயலலிதாவும் பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் பகிர்ந்து இருந்தார். ஜெயலலிதா உடன் பிரேமலதா உள்ளது போன்ற புகைப்படத்தை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் எல்.கே சதீஷ் பதிவிட்டார்.
அரசியல் வட்டாரத்தில் இந்த புகைப்படம் பேசுபொருளாக மாறிய நிலையில், எதற்காக இந்த புகைப்படம் என்பதற்கு விளக்கம் அளித்தார் எல்.கே சதீஷ்.
ஜெயலலிதாவுக்கு அடுத்த வலிமை மிகுந்த பெண் தலைவராக பிரேமலதா உள்ளார் என்பதற்காக தான் அந்த புகைப்படத்தை பதிவிட்டதாக தெரிவித்தார். பெண் ஆளுமையின் தலைமையில் இயங்கும் கட்சி தேமுதிக என்பதை உணர்த்துவதாக அந்த புகைப்படம் பகிர்ந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெ. படத்துடன் பிரேமலதா... இதுக்கு தான் அப்படி போட்டேன்! L.K.சுதீஷ் விளக்கம்..!
சிறந்த அரசியல் பெண் ஆளுமை என்ற விருது பிரமலதாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆகஸ்ட் எட்டாம் தேதி சிங்கம் தினம் என்பதால் அதை ஒட்டி சிங்கப் பெண் என குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்ததாக எல்.கே சுரேஷ் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பெண் ஆளுமையான ஜெயலலிதா தான் தனது முன்மாதிரி என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ஜெயலலிதா போன்று சிங்க பெண்ணாக பிரேமலதா உள்ளார் என சுதீஷ் பேசியதாக விளக்கம் அளித்தார்.
தமிழகத்திற்கு ஒரே எம்ஜிஆர், ஒரே ஜெயலலிதா, ஒரே கேப்டன் தான் என கூறினார். ஜெயலலிதாவின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று விளக்கம் அளித்தார். யாரோ ஒருவர் எடிட் செய்த புகைப்படத்தை சுதீஷ் பகிர்ந்து இருக்கிறார் என்று கூறினார். கேப்டன் இல்லாத போதும் அதே கேப்டன் தனக்கு கொடுத்த பயிற்சி, நம்பிக்கை, தைரியம், உறுதியோடு கேப்டன் வழியில் தானும், கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
கேப்டன் எங்களுக்கு மானசீக குரு என்று கூறுபவர்கள் கேப்டன் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிய பிரேமலதா, சோசியல் மீடியாக்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்வதை தான் தாங்கள் கூடாது என்று கூறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் தேமுதிக...முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முக்கிய அறிவிப்பு