சென்னை வந்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாமக நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான கேள்விக்கு உங்கள் விருப்பம் நிறைவேறும் என பேசினார்.

அன்புமணி உடனான கருத்து மோதலால் பாமாவில் பின்னடைவு இல்லை என்றும் முகுந்தன் பொறுப்புகளை விரும்பவில்லை, தொழில் செய்வதில் தான் ஆர்வமாக உள்ளார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: திடீரென சென்னை விரையும் ராமதாஸ்... போகிற போக்கில் சொன்ன முக்கிய செய்தி...!

அமித்ஷா வருகையை ஒட்டி பாஜகவுடன் கூட்டணி பேசப்படுமா என்ற கேள்விக்கு தனக்கு தெரியாது என பதிலளித்தார். அமித்ஷா வருவதும் தெரியாது, பாஜகவுடன் கூட்டணி குறித்து நான் நினைத்து பார்க்கவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏலேய் சமாதானம்-ல! ஜி.கே மணி சொன்ன குட் நியூஸ்.. தொண்டர்கள் குஷி..!