தைலாபுரத்தில் பாமகவின் மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் சொற்ப உறுப்பினர்களுடன் தொடங்கியது.216 நிர்வாகிகளில் சுமார் 15 பேர் மட்டுமே பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராமதாசுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் மோதல் முற்றி இருந்த நிலையில், மீண்டும் குடுமிபிடி சண்டையாக மாறுகிறது.

மாவட்ட மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு முன்னதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அன்புமணியை செயல் தலைவர் என குறிப்பிட்டு பேசியிருந்தார். செயல் தலைவர் அன்புமணிக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் செயல் தலைவர் அன்புமணி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வரலாம், வந்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். சித்திரை முழு நிலவு மாநாட்டால், கலைப்படைந்ததால் சிலர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம் என்றும் பாமக நிர்வாகிகள் கூறும் யோசனைகளையும் இன்று நான் கேட்க உள்ளேன் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ராமதாஸை வெளியேற்ற திட்டமா? - “மூன்றில் ஒரு பங்கு” - அன்புமணிக்கு அதிகரிக்கும் ஆதரவு...!

அனைத்து தொகுதிகளிலும் படுத்து கொண்டே ஜெயிக்கும் விதையை நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் என்ன பேசிய ராமதாஸ், சிங்கத்தின் கால்கள் பழுதுபப்படவில்லை, சீற்றமும் குறையவில்லை என்றார்.
இதையும் படிங்க: பாமகவில் ஓங்கும் அன்புமணியின் கை..! கழட்டி விடப்படுகிறாரா ராமதாஸ்?