• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கடலாக மாறிய புழல் ஏரி... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம்... காலையிலேயே சென்னைக்கு அதிமுக்கிய வார்னிங்...!

    சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 
    Author By Amaravathi Wed, 21 Oct 2026 08:55:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rapid Rise in Inflow at Puzhal and Chembarambakkam Lakes

    தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்குள் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த மூன்று மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING வெளியானது ஹைஅலர்ட்... உருவானது முதல் புயல் சின்னம்... அடித்து நொறுக்கப்போகும் கனமழை...!

    குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 

    புழல் ஏரி நிலவரம்: 

    நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 775 கன அடியாக இருந்த புழல் ஏரிக்கான நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,126 கன அடியாக அதிகரித்துள்ளது.

    மொத்தம் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், இன்று காலை நிலவரப்படி 2,248 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஒரே நாளில் புழல் ஏரிக்கு 81 மில்லியன் கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதன் மூலம், புழல் ஏரி தற்போது தனது மொத்தக் கொள்ளளவில் 68 சதவீதம் நீரைக் கொண்டுள்ளது.

    புழல் ஏரியிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 171 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

    கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி: 

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி, 24 அடி மொத்த நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 14.47 அடி உயரத்திற்குத் தண்ணீர் உள்ளது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியில், தற்போது 1,435 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து வரும் நீரும், மழைநீரும் சேர்ந்து வினாடிக்கு சுமார் 550 முதல் 555 கன அடி வரை வந்து கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் பல்வேறு ஏரிகளில் இருந்தும் நீர் வரத்து தொடர்ந்து வருகிறது. இதனால், இன்னும் சில மணி நேரங்களில் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏரிக்கு வரும் நீரின் அளவைப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாகப் பருவமழை இல்லாததால், செம்பரம்பாக்கம் ஏரி தொடர்ந்து வறண்ட நிலையில் காணப்பட்டது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் ஏரியின் நீர்மட்டத்தைக் கண்காணித்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
     

    இதையும் படிங்க: 16 மாவட்டங்களுக்கு குறி வைக்கும் கனமழை... இன்று எங்கெல்லாம் ருத்ரதாண்டவம் ஆடப்போகிறது தெரியுமா?

    மேலும் படிங்க
    திமுகவுக்கும் வெட்கமில்ல... நாதகவுக்கும் வெட்கமில்ல... அமைச்சர் வன்னி அரசு தாக்கு..!

    திமுகவுக்கும் வெட்கமில்ல... நாதகவுக்கும் வெட்கமில்ல... அமைச்சர் வன்னி அரசு தாக்கு..!

    தமிழ்நாடு
    ஓடிடியில் வெளியான நானியின் ‘தி பாரடைஸ்’..!! கயாடு லோஹரின் கிளாமர் சீன் தான் ட்ரெண்டே.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

    ஓடிடியில் வெளியான நானியின் ‘தி பாரடைஸ்’..!! கயாடு லோஹரின் கிளாமர் சீன் தான் ட்ரெண்டே.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    "நாகூர் தர்கா விஷயத்தில் அரசியல்"..! அரசாணையைப் பெற்ற அரங்காவலர் குழு..! அமைச்சர் ஷாஜஹான் பேட்டி.!!

    "நாகூர் தர்கா விஷயத்தில் அரசியல்"..! அரசாணையைப் பெற்ற அரங்காவலர் குழு..! அமைச்சர் ஷாஜஹான் பேட்டி.!!

    தமிழ்நாடு
    தமிழகத்தை தாக்குமா முரசு புயல்?! ஆந்திராவை நோக்கி நகருமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழகத்தை தாக்குமா முரசு புயல்?! ஆந்திராவை நோக்கி நகருமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    நைட் டிரெஸ்ஸில் கிளாமர் குத்தாட்டம்..!! ரித்திகா சிங் வெளியிட்ட வீடியோ.. செம ஷாக்கில் இளசுகள்..!

    நைட் டிரெஸ்ஸில் கிளாமர் குத்தாட்டம்..!! ரித்திகா சிங் வெளியிட்ட வீடியோ.. செம ஷாக்கில் இளசுகள்..!

    சினிமா
    சர்வதேசப் போட்டியில் சாதனை படைத்த நித்ய ஸ்ரீ! ரூ.30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்!

    சர்வதேசப் போட்டியில் சாதனை படைத்த நித்ய ஸ்ரீ! ரூ.30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்!

    இதர விளையாட்டுகள்

    செய்திகள்

    திமுகவுக்கும் வெட்கமில்ல... நாதகவுக்கும் வெட்கமில்ல... அமைச்சர் வன்னி அரசு தாக்கு..!

    திமுகவுக்கும் வெட்கமில்ல... நாதகவுக்கும் வெட்கமில்ல... அமைச்சர் வன்னி அரசு தாக்கு..!

    தமிழ்நாடு

    "நாகூர் தர்கா விஷயத்தில் அரசியல்"..! அரசாணையைப் பெற்ற அரங்காவலர் குழு..! அமைச்சர் ஷாஜஹான் பேட்டி.!!

    தமிழ்நாடு
    தமிழகத்தை தாக்குமா முரசு புயல்?! ஆந்திராவை நோக்கி நகருமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழகத்தை தாக்குமா முரசு புயல்?! ஆந்திராவை நோக்கி நகருமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    சர்வதேசப் போட்டியில் சாதனை படைத்த நித்ய ஸ்ரீ! ரூ.30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்!

    சர்வதேசப் போட்டியில் சாதனை படைத்த நித்ய ஸ்ரீ! ரூ.30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்!

    இதர விளையாட்டுகள்
    தனுஷை வைத்து அதிமுக போடும் கணக்கு என்ன? அரசியல் வட்டாரத்தில் எழும் கேள்விகள்!!

    தனுஷை வைத்து அதிமுக போடும் கணக்கு என்ன? அரசியல் வட்டாரத்தில் எழும் கேள்விகள்!!

    தமிழ்நாடு
    மாணவன் அகிலன் தற்கொலை..! வகுப்பு ஆசிரியர் அதிரடி கைது.!! தலைமறைவான ஹெட்மாஸ்டரை தேடும் பணி தீவிரம்..!!

    மாணவன் அகிலன் தற்கொலை..! வகுப்பு ஆசிரியர் அதிரடி கைது.!! தலைமறைவான ஹெட்மாஸ்டரை தேடும் பணி தீவிரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share