சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சென்னையில் முதற்கட்டமாக 155 மயான பூமிகளை தனியார் மூலம் பராமரிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விரைவில் சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோக செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 இடங்களில் அதற்கான பணிகளை மேற்கொள்ள TIDCO நிறுவனத்திற்கு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

இதேபோல் சென்னை பட்டினப்பாக்கம் டிமாண்டி சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாடல்ஸ் சாலையை எஸ்றா சற்குணம் சாலை என பெயர் மாற்றம் செய்யவும் சென்னை மாநாட்சி அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரத்தான மெட்ரோ ரயில்... பயணிகள் அவதி; காரணம் இதுதானாம்!!