சேலம் மாநகராட்சி 43 வது வார்டில் புது தெரு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்ததால் , கடந்த திமுக ஆட்சியில் சுமார் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு , பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் குணசேகரன் , அங்கிருந்த மாநகராட்சி ஆணையர் லலித் ஆதித்திய நீலமிடம் , ஏன் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாநகராட்சியின் மேயருக்கு ஆணையர் அழைப்பு விடாதது கண்டிக்கத்தக்கது.

இந்த மாநகரின் தந்தைக்கு , முதல் மரியாதை தர வேண்டிய மாநகராட்சி ஆணையர், முறையாக அழைக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பதில் சொல்ல முடியாமல் மாநகராட்சி ஆணையர் திணறியதோடு , அங்குமிங்குமாக சென்றார். அந்த சமயத்தில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நிகழ்வு இடத்திற்கு வந்தார்.
இதையும் படிங்க: மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!
அவரை வரவேற்ற மாமன்ற உறுப்பினர் குணசேகரன் , இந்த விழாவிற்கு சேலம் மாநகராட்சி மேயருக்கு முறையாக அழைப்பு கொடுக்கவில்லை. வேண்டுமென்றே மாநகராட்சி ஆணையர், அதிகாரி என்ற மமதையால் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிக்கின்றார் என புகார் கூறினார். அப்போது தான் அழைப்பு விடுத்ததாக மாநகராட்சி ஆணையர் கூறிய நிலையில் அதனை மாமன்ற உறுப்பினர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக மேயரிடம் பேசுவதாக கூறிவிட்டு அமைச்சர் கூறப்பட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!