சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியை சேர்ந்த ஜெயராமன் - அமராவதி தம்பதியினர், தென்னை மட்டை பின்னும் தொழில் செய்து வந்த நிலையில், நேற்று இரவு இவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வந்த பேரன் நவநீதன், இருவரும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், டி.ஐ.ஜி சந்தோஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் மூடியே கிடக்கும் அம்பேத்கர் சிலை. விரைவில் திறப்புவிழா... அமைச்சர் வன்னியரசு உறுதி..!!
மூதாட்டியின் காதில் இருந்த தோடு, மூக்குத்தி திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ள நிலையில், நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வயதான தம்பதியர் நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொலை கொள்ளை நகை பறிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் சேலம் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்..
இதையும் படிங்க: தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு 'நோ என்ட்ரி'! மோசடி கும்பலுக்கு அதிரடி செக்..! சேலம் அரச மருத்துவமனை முக்கிய முடிவு..!!