தூய்மை பணியில் தனியார்மையத்தை கண்டித்தும், குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கி வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு கழிப்பறை மற்றும் ஒய்வூதியம், மதியம் கைரேகை வைக்க வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும், அவர்லேண்ட் தனியார் நிறுவனம் 4 மாத குறைந்த சம்பளத்தை வழங்க வேண்டும், 2 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி சிஜடியூ பணியாளர்கள் சார்பாக மதுரை மாநகராட்சி வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழக அரசின் தனியார்மைய முடிவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது.இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்களை தனியார் மயப்படுத்துதலை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வீசிக உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் அமர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் தனியார்மயத்தை கண்டித்து ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் பணியாற்றும் நான்கு மண்டலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணிகளை தனியார்க்கு ஒப்படைத்தால் தங்களின் பணி பாதுகாப்பு பறிபோகும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் போராட்டத்தினால் ஈரோடு மாநகரில் இன்றைய தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்..
இதையும் படிங்க: மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியாருக்கு டெண்டர் விட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.. இதற்கு மாநிலம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என்கிட்ட அதைப் பத்தி விவாதிக்க தயாரா? - திமுகவுக்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!