தமிழக அரசியல் மற்றும் சினிமா இணைந்த பரபரப்பான வதந்திகள் மீண்டும் வெடித்துள்ளன. தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக அரசுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் ஒரு முன்னணி நடிகை, அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெறும் பிரபலத்தை மட்டும் நம்பி அல்லாமல், திட்டமிட்ட அரசியல் பயணத்திற்குத் தயாராகும் இந்த நடிகை, இந்திய அளவில் பல முக்கிய தேர்தல்களில் வெற்றிகரமான உத்திகளை வகுத்துத் தந்திருக்கும் அனுபவமிக்க அரசியல் ஆலோசகரைத் தனது வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளார்.
இந்த ஆலோசகர், முன்னதாகப் பல மாநிலத் தேர்தல்களில் கட்சிகளின் பொது இமேஜ் உருவாக்கம், பிரச்சார உத்திகள், மக்கள் தொடர்பு திட்டங்கள் ஆகியவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர். தற்போது அவர் இந்த நடிகைக்காக முழுநேர ஆலோசகராகச் செயல்படத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: தனுஷ் அரசியல் வருகையால் மாறுமா வாக்கு கணக்கு? தவெகவில் பரபரப்புக்கு என்ன காரணம்?

சமீபத்தில் நடைபெற்ற சில பொது நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய அளவிலான ரோடு ஷோக்களுக்குப் பின்னணியில் அவரது குழுவின் திட்டங்களே இருந்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் முன் எப்படிப் பேச வேண்டும், எந்த உடைகள் மற்றும் உடல் மொழியைக் கையாள வேண்டும், எளிமையாகப் பழகும் விதம் உள்ளிட்ட அனைத்தையும் விரிவாகப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியுடன் உள்ள நட்புறவைப் பயன்படுத்தி, பெண்கள் நலன், சமூகப் பிரச்சினைகள் போன்ற தளங்களில் முன்னிலை வகிக்கும் வகையில் காய்நகர்த்தி வருகிறார் இந்த நடிகை. அடுத்த சில மாதங்களில் நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களுடன் நேரடித் தொடர்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளார். மக்களின் வரவேற்பை உன்னிப்பாகக் கவனித்த பின்னரே, சரியான தருணத்தில் அதிகாரப்பூர்வ அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடப்போவதாகத் தகவல்.
சினிமாவில் பெற்ற புகழை அரசியலில் வெற்றியாக மாற்றும் நோக்கத்துடன், கட்சியில் முக்கியப் பொறுப்பு அல்லது மக்கள் பிரதிநிதி பதவி வரை செல்வதே இலக்கு என்று அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி வெற்றியடையுமா என்பதைக் காலம்தான் சொல்லும்.
இதையும் படிங்க: விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு..! சமூக நீதிக்கு முன்னுரிமை.! அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.!