நடிகர் பாலா ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். மக்கள் மத்தியில் பாலாவிற்கு என தனி இடம் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் மீது சமீப நாட்களாக அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. பாலாவிற்காக நாம் தமிழர் கட்சிகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு குரல் எழுப்பி இருக்கிறார். பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலர் மட்டுமே என்றும் முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது., அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் தம்பி பாலாவும் என தெரிவித்தார் .தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ வழி ஏற்படுத்தித் தரும் தம்பி பாலாவின் உயர்ந்த உள்ளமும், உதவுகின்ற செயல்களும் மிகுந்த பாராட்டுக்குரியது என்றும் வறுமையில் வாடும் மக்களுக்கு தம்பி பாலா தம்மால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வருகின்றார் எனவும் நாம் அதனை வாழ்த்தி, வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும். முடிந்தால் அவரைப்போல தாமும் உதவிகள் செய்ய வேண்டும்., மாறாக உதவி செய்பவர்கள் புகழ் பெறுகிறாரே என்று பொறாமை கொள்வதும், அவருக்கு கிடைக்கும் நற்பெயரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகளை அள்ளித்தெளிப்பதும் தரம் தாழ்ந்த இழிச்செயல் என்றும் தெரிவித்தார்.
தம்பி பாலா மீது சமூக ஊடகங்கள் வாயிலாக கடந்த 10 நாட்களாக சிலர் செய்யும் எதிர்மறையான அவதூறு தாக்குதல் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஒருவர் தன்னலமற்று தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் எத்தனை எத்தனை கேள்விகள்., உதவி செய்கின்றவருக்கு எங்கிருந்தோ பணம் வருகின்றது., அவர் சர்வதேச கைக்கூலி என்கின்றனர் என கூறினார். சரி, அப்படியே இருக்கட்டும்., அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை எனவும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி எனவும் சாடினார்.

எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன் என்றும் உங்களுக்கு என்ன கவலை எனவும் கேட்டுள்ளார். இதையெல்லாம் கேட்பவர்கள் எப்படி இவ்வளவு கோடிக்கு சமாதி கட்டுனீங்க., எப்படி இவ்வளவு கோடி போட்டு திரைப்படம் எடுக்குறீங்க., அப்படியென்று யாரையும் கேட்பது இல்லையே ஏன் எனவும் மற்றவர் கண்ணீரைத் துடைத்து உதவ வரும் இளம்பிள்ளைகளை வருமுன்னே இப்படி கசக்கித் தூரப்போட்டீர்கள் என்றால், இனி வருங்காலத்தில் இதுபோல யார் உதவ முன்வருவார்கள் என கேட்டார்.
இதையும் படிங்க: ச்ச்ச... என்னா மனுஷன் யா! எனக்கும் சந்தோஷம்… KPY பாலா உருக்கம்!
அன்புத்தம்பி பாலாவுக்கு நான் சொல்வது, எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினை தொடர்ந்து செய்துகொண்டே இரு என்றும் தூரத்தில் இருந்தாலும் என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான அண்ணன்கள் உன்னை நேசித்துத் துணைநிற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கப் சிப்-னு இருக்கணும்… வழக்கு பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது… சீமான், விஜயலட்சுமிக்கு தடை…!