சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விளம்பர அரசியல் மற்றும் செய்திய அரசியல் செய்கிறார்கள் என திமுக மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை உரைகளை சீமான் விமர்சனம் செய்துள்ளார். மடிக்கணினி வழங்கப்பட்டது தொடர்பாகவும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டது குறித்தும் சீமான் விமர்சித்துள்ளார்.
இவ்வளவு மடிக்கணினிகளை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்றும் அப்படி செய்திருந்தால் அது மக்கள் அரசியல் என்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு மடிகணினிகள் வழங்கியது தேர்தல் அரசியல் எனவும் தெரிவித்தார்.

தற்போது வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையை கடந்த ஆண்டு வழங்கி இருந்தால் அது மக்கள் அரசியல் என்றும் தற்போது வழங்கி இருப்பது தேர்தல் அரசியல் எனவும் கூறி உள்ளார். இந்த வருடம் தமிழக மக்களுக்கு தைப்பொங்கல் இல்லை என்றும் தேர்தல் பொங்கல் என்றும் பேசினார். தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் கூட அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் பயின்ற மருத்துவப் பட்டதாரிகள்... கோரிக்கையை கேளுங்க... ஆதரவு குரல் கொடுத்த சீமான்..!
திராவிட பொங்கல் குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது திராவிடத்தையே பொங்கல் வையுங்கள் என்று திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள் என்று கூறுவதாக தெரிவித்தார். திராவிட தீண்டாமை இழுவை துடைத்தெறிய போராடாமல் இருப்பதை விட செத்து ஒழிவதே மேல் என்று கூறினார்.
இதையும் படிங்க: பரிதவிக்கும் செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள்... பச்சை துரோகம் செய்யாதீங்க... குரல் கொடுத்த சீமான்...!