அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் ரத்ததான விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆடு வெட்டி விருந்து வைத்து நடத்தக்கூடிய விழா இது இல்லை என்றும் உயிர்காக்கும் விழா எனவும் கூறினார்.

இந்த ஆட்சியில் பீர்பாட்டிலும், பிராந்தி பாட்டிலும் கொடுத்தால் தான் கூட்டம் வருவதாகவும், ஆனால் இங்கு, ரத்தம் கொடுப்பதற்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது எனவும் தெரிவித்தார். அதற்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் பாராட்ட வேண்டும் என்றும் செல்லூர் ராஜு பேசினார்.
இதையும் படிங்க: நான் துரோகம் செய்ய மாட்டேன்! சீக்கிரமே ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு... ஜி.கே. மணி உறுதி..!

பாமகவில் உள்ள பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளிக்காமல் செல்லூர் ராஜு வேகமாக எழுந்து சென்றார்.
இதையும் படிங்க: அத்துமீறும் பாகிஸ்தான்! மீறப்படும் அமைதி ஒப்பந்தம்... இந்திய ராணுவ அதிகாரிகள் விளக்கம்!