தமிழக அரசியலின் புதிய அலையாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, அணில் போல உழைக்க வேண்டும் என்ற அவரது கூற்று, சமீபத்திய பொதுக்கூட்டங்களிலும், தொண்டர்கள் சந்திப்புகளிலும் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது. இது வெறும் உவமை மட்டுமல்ல. விஜயின் அரசியல் உத்தியின் அடிப்படை தத்துவமாகவே உருவெடுத்துள்ளது.
அணிலின் அளவிறக்கும் உழைப்பு, ஒழுக்கம், கூட்டு ஒற்றுமை ஆகியவற்றை அவர் தனது கட்சியின் தொண்டர்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறி, 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை வடிவமைக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் இந்த பேச்சை சீமான் விமர்சித்தார். தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை அணில்கள் என்று கூறி விமர்சித்து வருகிறார்.

இதனிடையே, ராமர், பாலம் கட்ட அணில் உதவியதை போல அதிமுக ஆட்சி மீண்டும் அமைய இளைஞர்கள் உதவி செய்ய வேண்டும் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி உள்ளார். விஜய் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும் பேசி வருகிறார்.
இதையும் படிங்க: உடனே வாங்க... இபிஎஸ் அழைப்பு! திண்டுக்கல்லுக்கு விரைந்த அதிமுக முக்கிய தலைகள்!
ஏற்கெனவே, திமுகவை உண்மையாகவே விஜய் எதிர்ப்பதாக இருந்தால் அவர் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி இருந்தார். அணில் போல உதவ வேண்டும் என தற்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருப்பது எங்கேயோ இடிக்கிறதே என்ற விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தலைமைக்கே கெடு! சம்பவம் செய்த செங்கோட்டையன்… நழுவியோடும் அதிமுக தலைகள்