கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார்.
செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதிமுகவின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். இருப்பினும் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாராட்டு மடலில் தமிழக நிதி கேட்டு ஒருவரை கூட எழுதலையே? இபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
இந்த நிலையில், தமிழக மக்கள் அனைவரும் உங்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், காலையில் எழுந்தவுடன் விளையாடி விடாதீர்கள் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக செங்கோட்டையனுக்கு அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி வலியுறுத்தினார். இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன இன்று ஆக்கி விடாதீர்கள் என்றும் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஊற்றி முழுகும் வேலையெல்லாம் வேண்டாம் என்றும் தெரிவித்தார். ஏழு முறை வெற்றி பெற்ற நீங்கள் மீண்டும் பழனிச்சாமியின் தலைமையை ஏற்று சென்றீர்கள் என்றால் மக்கள் மட்டுமல்லாது உங்கள் ஆதரவாளர்கள் கூட ஓட்டு போட மாட்டார்கள் என்று கூறினார். எனவே நல்ல முடிவு எடுங்கள் என்று செங்கோட்டையனுக்கு புகழேந்தி வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: அதிமுக சிதையுது., NDA செதறுது! முடிஞ்சது கதை... அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம்..!