வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. ஆனால் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்திய நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிப்பது, மிகமிக மோசமான சர்வாதிகாரத்தின் உச்சம் என திமுக தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது. அதைத்தான் தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்கிற பெயரில் பீகாரில் நிகழ்த்தியது ஒன்றிய பாஜக அரசு என சாட்டியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளது. ஏற்கெனவே ED, CBI, IT உள்ளிட்ட பரிவாரங்கள் மூலம் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் பாஜக தற்போது தேர்தல் ஆணையத்தின் மூலம் காரியம் சாதித்துவிடலாம் என கனவு கண்டுள்ளது என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: "விரைவில் ஒரு விரல் புரட்சி வெடிக்கும்"... விஜய் ஸ்டைலில் திமுகவை எச்சரித்த செல்லூர் ராஜூ...!
ஆனால், அண்ணாவின் தம்பியாய், கலைஞரின் வழியில் நின்று தமிழ்நாட்டை காத்து வரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரையில் பாஜகவின் பாசிச எண்ணங்களும், அழுகுணி ஆட்டங்களும் இங்கே பலிக்காது என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு போராடும் என்றும் தமிழ்நாடு வெல்லும் எனவும் கூறியுள்ள திமுக, ஜனநாயகம் வழங்கியுள்ள பொதுமக்களின் வாக்குரிமையை திமுக பாதுகாக்கும் என்றும் உறுதிப்பட கூறியுள்ளது.
இதையும் படிங்க: பல கோடியில் சமாதி கட்டுறீங்க... நெல் சேமிப்பு கிடங்கு கட்ட முடியலையா? திமுக அரசை சாடிய சீமான்...!