சிவகங்கை மாவட்டத்தில் பிரபல ரவுடியாக அறியப்பட்ட சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சிவகங்கை அருகே ஒக்கூர் பகுதியில் உள்ள மேலமங்கலத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அந்நிகழ்ச்சியைக் காண புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மதன் வந்திருந்தார். அப்போது ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து ஓடஓட விரட்டியது.
அருகிலுள்ள கரும்புத் தோட்டத்திற்குள் ஓடிய மதனை அக்கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் உருவாக்கியது.சுள்ளான் மதன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. குறிப்பாக 2024ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சூர்யா மற்றும் சுபாஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். மேலும் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ராஜேஷ் என்பவரின் கொலை வழக்கிலும் இவரது நண்பர் அருண்பாண்டியன் தொடர்புடையவராக இருந்தார். அருண்பாண்டியன் தற்போது ராமநாதபுரம் சிறையில் உள்ளார். இந்த நிலையில் ராஜேஷின் நெருங்கிய நண்பரான மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சான் பகுதியைச் சேர்ந்த மிதுன் மாணிக்கம், தனது நண்பருக்காக பழிவாங்கும் நோக்கில் மதனைக் கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ரவுடி சுள்ளான் மதன் கொலை..! மேலும் 4 பேர் அரெஸ்ட்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தனிப்படை..!
மிதுன் மாணிக்கம் தலைமையிலான கும்பல் மதனின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மேலமங்கலத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு மதன் வருவது தெரிந்ததும் அவர்கள் திட்டத்தை செயல்படுத்தினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக எட்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே பாலமுருகன், பிரதீப், பாபு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விசாரணையில் நண்பரைக் கொன்ற ஆத்திரத்தில் பழிக்குப் பழியாக இந்தக் கொலையைச் செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.தொடர் விசாரணையில் முக்கிய குற்றவாளியான மிதுன் மாணிக்கம் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழா.. அக்.31 வரை சிவகங்கையில் 12 நாட்களுக்கு 163 தடை உத்தரவு அமல்!