தமிழ் மாதங்களில் ஒன்றான மாசி மாதத்தில் மகா சிவராத்திரிக்கு பின்னர் சிறப்பிற்குரிய நாளாக பார்க்கப்படுகிறது இந்த மாசிமக விழா. மாசி மாதம் பௌர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாளை தான் மாசிமகம் என்று வழிவழியாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
மாசி கயிறு பாசி படியும், மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்றும் புராணங்களிலும் பழமொழிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த நன்னாளில் புனித தளங்களில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடினால் ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை கூறிய கூற்றாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
முன்னதாக இந்த நாளில் அனைத்து கோயில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனாலேயே இந்த மாதத்தை கடலாடும் மாதம் என்றும் தீர்த்தமாடும் மாதம் என்றும் சொல்வதுண்டு. இதிலும் கூடுதல் சிறப்பாக கும்பகோணம் சென்று புனித நீராடினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பரவலாக ஆன்மீக பின்பற்றாளர்களிடையே நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: மாசிமக சிறப்பு வழிபாடு.. சென்னை கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்..

அதனாலேயே இந்த நாளில் கும்பகோணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது உண்டு. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வர். குறிப்பாக இந்த மாதத்தில் பெண்கள் காரடைய நோன்பு விருந்து அவர்கள் புதிய மாங்கல்யம் மாற்றுவதும் உண்டு.
ஆண்டுதோறும் மாசி மகம் வருகிறது என்றாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகா மகத்திற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. மாசி பௌர்ணமி அன்று மகம் நட்சத்திரம் சேர்கின்ற நாள் மாசிமகம் என்று அழைக்கப்படுவதை போன்று அதே நாளில் கும்ப ராசியில் சூரியன் இருக்க குரு பகவான் சிம்ம ராசியில் பயணிக்கும் போது வரும் நாள்தான் இந்த மகாமகம் என்று அழைக்கப்படுகிறது.
காசியில் புனித நீராடினால் பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கை பின்பற்றப்படும் நிலையில், காசியில் பாவம் செய்தோருக்கே அதிலிருந்து விமோசனம் வேண்டுமானால் அவர்கள் கும்பகோணத்தில் நீராட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க தளங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து அங்கு இருக்கக்கூடிய அங்கு இருக்கும் நீர்நிலைகளில் தீர்த்தமாடுவதால் ஏழு ஜென்மங்களுக்கு ஆனா பாவங்கள் நீங்கி புது வாழ்வு பெறப்படும் என்பது ஐதீகம்.

பொதுவாக இந்த திருநாளில் எந்த தெய்வத்தை வழிபடுவது என பக்தர்களுக்கு அவ போது சந்தேகங்களும் உண்டு. சிவனுக்கு சிவராத்திரி, பெருமாளுக்கு ஏகாதேசி, முருகனுக்கு தைப்பூசம், விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி என ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனியாக பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டு ஒரு விழாவாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மாசி மகத்தன்று இந்த தெய்வம் என்று இல்லாமல், மனதில் முழு பரவசத்துடன் என் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம். குறிப்பாக உமாதேவி தாட்சாலியாக அவதரித்த நாள் என்பதனலும் பெண்கள் இந்நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் கூடுதல் பலன்களைக்கும் என நம்பப்படுகிறது..

மாசி மகத்தன்று முருகன் அவரது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாகவும், பாதாள உலகில் இருள் சூழ்ந்து கிடந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்துமீட்டது உள்ளிட்ட பல்வேறு புராணக் கதைகளை அடுக்கியுள்ளது. இந்த மாசிமகம்.
மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு இன் நன்னாளிலிருந்தே துவங்கலாம் என்று நம்ம படுவதனால் பக்தர்கள் பலரும் கோயில் ஆலயங்களில் உள்ள நீர் நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகளும் அரங்கேறுவது வழக்கம்.
இதையும் படிங்க: தஞ்சையில் களைகட்டிய மாசிமக தேரோட்டம்.. கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் வழிபாடு!