ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்த புகழ்பெற்ற வைணவத் திருத்தலத்தில் நடைபெறும் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இந்தக் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அவதரித்த புனித தலமாகவும் விளங்குகிறது.
ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடி மாத பூர நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக, ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் பவனி வருவர்.
இந்தத் திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. தேரோட்டத்தை தமிழக அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பிரம்மாண்ட தேரின் வடம் பிடித்து பக்தர்கள் பரவசத்துடன் இழுத்து வழிபட்டனர்.
இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகனுக்கு சிக்கல்... பாயுமா அதிரடி நடவடிக்கை? - விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு...!
காலை சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, ஆண்டாள் மற்றும் ரங்கமன்னாரின் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பிரமாண்டமான தேரில் வைக்கப்பட்டனர். தேரினை பக்தர்கள் கோஷமிட்டவாறு தேரை இழுத்தனர். இந்த தேரோட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மாறி மாறி இரு தரப்பினரும் தாக்கி கொண்ட சம்பவம் தேரோட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தலைவரின் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பான பிரச்சனையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆண்டாள் சூடிய மாலையை தலைவரின் சிலைக்கு அழைக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கூறி பிரச்சனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த மோதலை அடுத்து போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் எச்சரித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: தலை தூக்கும் வாக்காளர் திருத்த விவகாரம்! பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... இரு அவைகளும் முடக்கம்