திருவாரூா் செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், நாளை நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், தொடா்ந்து, ஜூலை 10 ஆம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார். முன்னதாக கள ஆய்வு மேற்கொள்ள 9 ம் தேதி காலை சென்னையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுகிறார்.

மாலை அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் செல்லூர் முதலமைச்சர் அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் ரயில்நிலையம் ரவுடான அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்சியில் கலந்துகொள்ள செல்லும் முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: சொல்லி அடித்த ஸ்டாலின்... மதுரை மாநாகராட்சிக்கு பறந்த அதிரடி உத்தரவு; கலங்கி போன மண்டல தலைவர்கள்!!

அங்கு நடைபெறும் ரோட் ஷோ நிகழ்ச்சியிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். 9 ஆம் தேதி இரவு திருவாரூரில் தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 10 ஆம் தேதி காலை திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு சென்னை திரும்புகிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, முக்கிய விருந்தினா்கள் வரும் வழித்தடம் ‘ரெட் ஜோன்’(சிவப்பு மண்டலம்) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் ட்ரோன் கேமரா, ரிமோட் மூலம் இயங்கும் வான்வெளி சாதனங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வரின் விசிட்.. திருவாரூர் மக்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கு! தயாரா இருங்க..!