டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மதுவகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் புதிய கொள்முதல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த சமபங்கீடு முறையை மாற்றி, ஒவ்வொரு கடையின் உண்மையான தேவையை அடிப்படையாகக் கொண்டு மதுபானங்களை இருப்பு வைக்கும் இந்த மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான வகைகள் எளிதாக கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில், இதற்கு முன்பு அனைத்து சப்ளையர்களிடமிருந்தும் வரும் மதுபான வகைகளை சமமாகப் பிரித்து வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த சமபங்கீடு முறை கடந்த ஜூலை 20 முதல் அமலில் இருந்தது. அதன்படி, குறிப்பிட்ட சில வகைகள் மட்டுமே அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டு, மற்றவை குறைவாக இருந்ததால், வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் மதுவகையை பெற முடியாத நிலை அடிக்கடி ஏற்பட்டது. சில கடைகளில் விற்பனை குறைவான வகைகள் அதிகமாக குவிந்து கிடந்தன.

இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். அதே நேரத்தில், அதிகம் விற்பனையாகும் வகைகள் விரைவில் தீர்ந்துபோய், தேவைக்கு ஏற்ப வழங்க முடியாத சூழல் உருவானது.இந்தப் பிரச்சினையை களையும் நோக்கில் டாஸ்மாக் நிர்வாகம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இன்று செப்டம்பர் 21 முதல், அனைத்து மாவட்ட மேலாளர்களும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இண்டெண்ட் வழங்கும்போது, அந்தந்த கடைகள் கேட்கும் உண்மையான தேவை அல்லது கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும். ஒவ்வொரு கடையும் தனது உள்ளூர் விற்பனைப் போக்கு மற்றும் வாடிக்கையாளர் விருப்பங்களை கருத்தில் கொண்டு தேவையான வகைகளையும் அளவுகளையும் குறிப்பிடும். அதன்படி கிடங்குகளில் இருந்து சரக்கு அனுப்பப்படும். இதனால், அதிகம் விற்பனையாகும் மதுவகைகள் அந்தக் கடைகளில் போதுமான அளவில் இருப்பு வைக்கப்படும்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!
குறைவாக விற்பனையாகும் வகைகள் தேவையில்லாமல் குவியாது.இந்த மாற்றத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பிராண்டுகளையும் அளவுகளையும் எளிதாகப் பெற முடியும். ஒவ்வொரு பகுதியிலும் விற்பனைப் போக்கு வேறுபடும் என்பதால், உள்ளூர் தேவைக்கு ஏற்ப இருப்பு மேலாண்மை செய்யப்படும். இது மெதுவாக விற்பனையாகும் சரக்குகள் குவிவதைத் தடுத்து, கடைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதையும் தவிர்க்கும். அதே சமயம், தேவை அதிகமாக உள்ள வகைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும். இதனால் வாடிக்கையாளர் திருப்தி அதிகரிக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் இனி ரூ.500க்கு மேல் கேஷ் கூடாது? கூடுதல் விலைக்கு மது விற்பனைக்கு செக்! புதிய விதி!