சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். 16வது நாளாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று இடைநிலை ஆசிரியர்கள் பேரணி சென்றனர். இன்றும் தங்களது போராட்டத்தை தொடர இருக்கின்றனர். அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
போராடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்தது. இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சென்னை எழும்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்திருந்தனர். காலை உணவு சாப்பிடுவதற்காக ஓட்டலுக்குச் சென்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

வலுக்கட்டாயமாக வெளியில் அழைத்து வந்து கைது செய்ததால் ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்தனர். தங்களை ஆசிரியர்களாக மதிக்கிறீர்களா என்றும் தீவிரவாதி போல் நடத்துவதாகவும் கைகளை முறுக்கி விடுவதாகவும் ஆசிரியர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். குழந்தைகளுக்கு உணவு சாப்பிட கூட அனுமதிக்காமல் ஹோட்டலில் இருந்து இழுத்து வந்ததாகவும், ஹோட்டலில் அனுமதிக்க கூடாது என்று கூறுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: OUT OF CONTROL... இடைநிலை ஆசிரியர்கள் பேரணி... சேப்பாக்கம் ஸ்தம்பிப்பு.!
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் நாங்கள் எதற்கு போராட வரப்போகிறோம் என்று கேள்வி எழுப்பிய ஆசிரியர்கள், தங்களை அவமானப்படுத்துவதாக குற்றம் சாட்டினர். போராட்ட களத்திற்கே தங்கள் இன்னும் செல்லவில்லை என்றும் அதற்குள் சாப்பிட கூட விடாமல் இப்படி கைது செய்வது நியாயமா என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: என்னது சம்பளம் கொடுக்க மாட்டீங்களா? முதல்ல மரியாதை கொடுங்க..! அண்ணாமலை கொந்தளிப்பு..!