தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தில் மேலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தப்பியோடிய கைதிகளில் ஒருவரான லிங்கபிரசாத் என்ற கைதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அக்டோபர் 26 ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு வந்தது போல் நடித்தனர்.
மருத்துவ உதவிக்காக சிறைக் காவலர்கள் அறைக்குள் நுழைந்தபோது கைதிகள் அவர்களைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் சில காவலர்கள் காயமடைந்த நிலையில் 17 கைதிகளும் சிறையை விட்டுத் தப்பி ஓடினர். பெரும்பாலானோர் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணைக் கைதிகள் ஆவர்.சம்பவம் நடந்த உடனே காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.

சிறைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. இதில் ஏற்கனவே பிரவீன் குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர் மற்றும் ராஜ்குமார் ஆகிய நான்கு கைதிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.தற்போது மாற்றுத்திறனாளி கைதியான லிங்கபிரசாத் கூடுதலாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் தேனி சிறையில் நடந்தது என்ன?... கைதிகள் தப்பியோட மிக முக்கிய காரணம் இதுவா?
இதனால் தப்பியோடிய 17 பேரில் ஐந்து பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 கைதிகளைப் பிடிக்க காவல்துறையினர் வலை வீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர். பேருந்து நிலையங்கள், காட்டுப்பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தகவல் அளிக்குமாறும் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: திமுக Ex. அமைச்சர் அன்பில் மகேஷ் அரெஸ்ட்..! முன்ஜாமீன் தள்ளுபடி... அதிரடி காட்டிய போலீஸ்..!!