• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பின் தலையில் ரத்த கசிவு... சிறையில் அருணாச்சலத்திற்கு நடந்தது என்ன?... தம்பி சொன்ன பரபரப்பு தகவல்...!

    காவல்துறையினர் தாக்கியதால் தான் எனது அண்ணன் பின் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 24 Jul 2026 09:15:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thoothukudi arunachalam brother byte

    தூத்துக்குடி காவல்துறை கூறுவது போல் எனது அண்ணனுக்கு எந்தவித நோயும் கிடையாது. அவர் நன்றாக இருந்தார். காவல்துறையினர் தாக்கியதால் தான் எனது அண்ணன் பின் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இதற்கு உரிய நீதி வேண்டும் என அருணாச்சலம் தம்பி சுடலைமணி தகவல்.

    தூத்துக்குடி அமுதநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் அருணாச்சலம், இவர் மூன்றாவது மைல் பகுதி அருகே உள்ள ஒரு அரசு மதுபானக் கடையுடன் அமைந்த மதுபான கூடத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடை அடைத்த பின்பு சட்ட விரோதமாக மது விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி காலை அரசு மதுபான கடை அடைத்திருந்த நிலையில் சட்ட விரோத மது விற்பனையில்  அருணாச்சலம் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கே வந்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலீஸ் மீனாட்சி சுந்தரம் மற்றும் தென்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் என நான்கு பேர் அவரை 120 மது பாட்டிலுடன் கைது செய்து தென்பாகம் காவல் நிலையம் அழைத்துச் சென்று அருணாச்சலம் மீது சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இதையும் படிங்க: ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக நீதிமன்ற நடவடிக்கையையும் காவல்துறையினர் மேற்கொண்டு இருந்தனர். அதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞர் அருணாச்சலத்தை ஆஜர் படுத்தி உடல் தகுதி  சான்றும் பெற்றுள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றம் அழைத்து செல்வதற்காக தென்பாக்கம் காவல் நிலைய விசாரணை கைதிகள் வைக்கப்படும் அறையில் மற்ற விசாரணை கைதிகளுடன் வைத்து இருந்துள்ளனர். 

    அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காவல்துறையினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து குடும்பத்தினர் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட அருணாச்சலத்தை காவல் துறையினர் சொந்த ஜாமினில் விடுவித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தலையில் காயம் ஏற்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வாலிபர் அருணாச்சலத்திற்கு பின் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரத்த கசிவு அதிகமாக இருந்ததை தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி அருணாச்சலத்திற்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார் 

    இதைத்தொடர்ந்து நேற்று காலை அருணாச்சலம் இறந்ததை தொடர்ந்து அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு அருணாச்சலம் இறப்பிற்கு காவல்துறை காவல் நிலையத்தில் வைத்து அவரை தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இறந்துள்ளார் எனக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலத்தின் தந்தை நாகராஜ் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களது போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.

    arunachalam

    இந்த நிலையில் அருணாச்சலம் தம்பி சுடலைமணி இது குறித்து கூறுகையில்,  எனது அண்ணன்  நல்ல உடல் நலத்துடன் இருந்தார். அவருக்கு இதுவரை எந்த நோயும் கிடையாது. காவல்துறையினர் தாக்கியதால்தான் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் காவல் நிலையத்தில் இரவு எட்டு முப்பது மணிக்கு மேல் எனது தாயார் வெளியே சென்று இருந்த நிலையில் அவர்களாகவே காவல்துறையினரே எனது அண்ணனை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விட்டு எங்களுக்கு தகவல் அளித்தனர். மேலும் சொந்த ஜாமினில் காவல்துறையினர் அவரை விடுவித்தனர் என தெரிவித்தார். 

    தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட எனது அண்ணனுக்கு பின் தலையில் காயங்க காரணமாக இரத்த கசிவு அதிகமாக ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து  மருத்துவர்கள் எங்களிடம் உறவினர்களிடம் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்தால் அவர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.

    இதைத் தொடர்ந்து உறவினர்கள் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நன்றாக இருந்த எனது அண்ணன் திடீரென்று நேற்று காலை உடல் நிலை மிகவும் மோசமாகி இறந்துவிட்டார். என்னுடைய அண்ணன் இறப்பிற்கு காரணம் காவல்துறை தாக்கியதால்தான் காயம் ஏற்பட்டு உயிரிழந்த்தார் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    மேலும் படிங்க
    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா
    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    சினிமா
    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு
    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share