தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்ததுறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு வார காமலமாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்ததுறை அறிவுறுத்தி இருக்கிறது. காலநிலை மாற்றம், மழைநீர் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வைரஸ் காய்ச்சல் பரவல் தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்ததுறை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக குளிர் பிரதேசங்கள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களான சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
வைரஸ் காய்ச்சலின் தன்மையை கண்டறிய தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களுக்கு மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகளோடு வரும் நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுக்குப் பிறகே புதிய வகை வைரஸ் கிருமி கண்டறியப்பட்டால் அதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்ததுறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான உள்ளவர்கள் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல மக்கள் கூடும் அதிக இடங்களை செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்ததுறை தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: உயிரிழந்த வட மாநில தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்... ஒப்பந்த நிறுவனம் அறிவிப்பு!
காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும்போது கட்டாயமாக முகவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்ததுறை தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: ஹாஸ்பிட்டலில் பச்சிளம் குழந்தைகளை கடித்த எலிகள்! ம.பி. யில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…