இன்று காலை தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் உருவாக வாய்ப்புள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திராவின் மத்தியப் பகுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
இருப்பினும், இதன் தாக்கத்தால் வடதமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1ஆம் தேதிகளில் வடதமிழகப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: பேய் மழை..! ஆர்ப்பரிக்கும் தண்ணீர்..! மணிமுத்தாறு அருவியில் குளிக்க 6வது நாளாக தடை..!!
தற்போதைய நிலவரப்படி, இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் பட்சத்தில், தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்தப் புயல் அமைப்பின் தாக்கத்தால் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் வீசி வருகிறது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டம் குறைந்து, வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு இந்த நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.
அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பிறகு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தற்போதைய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகராமல், வடதமிழகப் பகுதிகளைக் கடந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1ஆம் தேதிகளில் வடதமிழகத்தில் மிதமான மழைக்கும், பிற பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த கனமழை எப்போது பெய்யும்?
தற்போதைய முன்னறிவிப்பின்படி, இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அது ஆந்திரா நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்தில் பெரிய அளவிலான மழை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்து சென்ற பிறகு, நவம்பர் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு உருவாகும் அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகருமா என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட மழைப்பொழிவு குறித்து கணிக்க முடியும். அந்த அமைப்பு தமிழகத்தை நோக்கி வந்தால், மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
இதையும் படிங்க: ருத்ரதாண்டவம் ஆடப்போகும் ‘அர்னாப்’... இன்று தமிழகத்திற்கும், நாளை ஆந்திராவுக்கும் வெளியானது அதி முக்கிய எச்சரிக்கை...!