அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சிபிஐ புலன் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும் தமிழக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி வழக்கு தொடுக்கப்பட்டது. ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிசிஐடி டிஜிபி கண்காணிப்பில் தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலன்.. டீயில் எலிமருந்து கலந்து கொடுத்த காதலி.. முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் எனவும் சவால்..
இந்த புலனாய்வு குழு இடைக்கால விசாரணை அருகே தாக்க செய்து வருகிறது. இந்த நிலையில், நீதிபதி சுந்தர் மோகன் முன்பு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக காவல் துறையின் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, சாட்சிகள், கொலைக்கான உள்நோக்கங்கள் ஆராயப்பட்டு புலன் விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தற்போது கடலூர் மாவட்ட எஸ்.பியாக பணிமாற்றம் செய்திருப்பதால் புலன் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார். அவருக்கு பதிலாக திருச்சி அல்லது திருச்சி அருகிலுள்ள காவல்துறை அதிகாரிகளை புலன் விசாரணை அதிகாரிகளாக நியமித்தால் ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கடலூருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஜெயக்குமார் எஸ்.பி.க்கு மாற்றாக திருச்சி டிஐஜி வருண்குமார், தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்படுவதாகவும், சிறப்பு புலனாய்வு அதிகாரிகளோடு இவர்கள் இணைந்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் இளம்பெண் வீட்டிற்குள்ளேயே கொலை... 'பாய் ஃப்ரண்ட்' நடத்திய பயங்கர சம்பவம்..!