தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் பல தொகுதிகளில் ஆரம்ப முன்னிலையைப் பெற்றுள்ளனர்.
குறிப்பாக சென்னையின் தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா மற்றும் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கையில் சாதகமான நிலையில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்தல் தவெகவின் முதல் பெரிய அரசியல் சோதனையாக அமைந்துள்ள நிலையில், இளைஞர்கள் மற்றும் மாற்றம் விரும்பும் வாக்காளர்களின் ஆதரவு தெளிவாகப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. தியாகராய நகர் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவியது. திமுகவின் ராஜா அன்பழகன், அதிமுகவின் சத்யா, தவெகவின் என். ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின் அனுஷா விஜய்குமார் ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026..! தவெக முதலிடம்..!! திமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை..!!
இந்தத் தொகுதியில் 83.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், காலை 9.30 மணி நிலவரப்படி என். ஆனந்த் 3,613 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் சத்யா இரண்டாவது இடத்தில் 1,994 வாக்குகளுடன் தொடர்ந்தார். தவெகவின் புதிய அரசியல் வருகை மற்றும் விஜய்க்கு நெருக்கமான என். ஆனந்தின் செல்வாக்கு இங்கு திமுக மற்றும் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை பிளக்கும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: #TNElectionResults2026: பலித்தது விஜய் வாக்கு... எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம ஷாக்கு.... தவெகவைப் பார்த்து அரண்டுபோன திமுக...!