தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். ஊழல், நிர்வாகத் திறன் குறைபாடு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்திய த.வெ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தானே போட்டியிட்டார். கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் முடிவு, கட்சியின் தன்னம்பிக்கையை பிரதிபலித்தது.

மக்கள் மத்தியில் த.வெ.க.க்கு ஏற்பட்டுள்ள ஆதரவு குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பு மக்களும் குறிப்பாக இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் பொதுமக்கள் இந்தக் கட்சியை வரவேற்றுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் விஜய் பங்கேற்ற கூட்டங்கள் பெரும் கூட்டத்தைத் திரட்டின. குழந்தைகளைப் பெற்றோரை வாக்களிக்கத் தூண்டுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தது, குடும்பங்களை ஒன்றிணைத்து வாக்கு சதவீதத்தை உயர்த்த உதவியது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பல தொகுதிகளில் பின்தங்கி இருந்த தமிழக வெற்றிக்கழகம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.
இதையும் படிங்க: #TNElectionResults2026: பலித்தது விஜய் வாக்கு... எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம ஷாக்கு.... தவெகவைப் பார்த்து அரண்டுபோன திமுக...!
முதல் இடத்தில் திமுக இரண்டாவது இடத்தில் அதிமுக மூன்றாவது இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் இருந்தது. இதைத்தொடர்ந்து அதிமுகவை பின்னுக்கு தள்ளு இரண்டாம் இடத்திற்கு விஜய் கட்சி சென்றது. இந்த நிலையில் அடுத்தபடியாக திமுகவை பின்னுக்கு தள்ளும் இடத்திற்கு தமிழக வெற்றி கழகம் வந்துவிட்டது. திமுக 54 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் 52 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெற்றது. இதன் பிறராக தமிழக வெற்றி கழகம் தனது ஆட்டத்தை தொடங்கியது. திமுகவை பின்னுக்கு தள்ளி 60 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளது. இது தமிழக அரசியலை புரட்டி போடும் சம்பவமாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்பும் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #TNElectionResults2026..! காரைக்குடியில் சீமான் பின்னடைவு..! TVK பிரபு தொடர்ந்து முன்னிலை..!!