சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டு நிறைவடைந்த பிறகு மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அமைச்சரவையில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்தார். சாதிவாரி கணக்கு எடுப்பு நடத்துவதற்கான ஆணையம் அமைக்க முடிவு எடுத்திருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கு பிசி இட ஒதுக்கீடு பெற உரிமை இல்லை என்ற தீர்ப்பை எதிர்த்து முறையிட முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். முதலமைச்சரின் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நான்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், எட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார்.
இதையும் படிங்க: குற்றவாளியைப் போல நடத்தினார்கள்! விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதாக பேராசிரியர் கலையரசன் கடிதம்!
திமுக அமைச்சர்கள் தவறு செய்து மாட்டிக்கொண்டால் கேள்வி கேட்கக் கூடாது என்றும் பார்ட்டி ஃபண்ட் வாங்கி மாட்டிக் கொண்டால் கேள்வி கேட்கக்கூடாது என்றும் மிரட்டி பணம் வாங்கினார்கள் என்று புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்று தெரிவித்தார். செய்த தவறுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன அரசு என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!