• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எதிர்வரும் தேர்தலில் TVK - DMK இடையே தான் போட்டி.. பொதுக்குழு மேடையில் வெளுத்து வாங்கிய விஜய்..!

    எதிர்வரும் தேர்தலில் தவெக - திமுக இடையே தான் போட்டி என பொதுக்குழு மேடையில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
    Author By Rahamath Fri, 28 Mar 2025 15:11:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-leader-vijay-speech-in-meeting

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கட்சியின் தலைவரான விஜய் பேசியதாவது... 

    meeting

    நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் தோழிகளே.. அரசியல்னா என்னங்க, ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ்றது அரசியலா... ஒரே குடும்பம் வாழ்றது அரசியலா... இங்க தமிழ்நாட்டில ஒரே குடும்பம் தான் வாழுது. எனக்கு எதிரா கொள்கை விளக்க மாநாட்டில் தொடங்கி இப்போது பொதுக்குழுவரை தடைகள் பண்றாங்க.. மாமல்லபுரம் போய் கூட்டம் நடத்துறேன். பரவாயில்லை. அத்தனையும் மீறி எங்க மக்கள் சந்திப்பு  தொடர்ந்து நடக்கும். 

    இதையும் படிங்க: இது விஜயின் பேராசை..! தவெக பொதுக்குழுவில் வீராப்பு பேச்சு... கடுப்பான அதிமுக..!

    மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே..மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே பேர மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது, செயலிலும் -ஆட்சியிலும் காட்டணும் அவர்களே... ஒன்றிய அரசு பாசிசம் என்றால், இங்க மட்டும் நீங்க என்ன பண்றீங்க அதே பாசிசம் தானே... கட்சித் தலைவனாக என் தொண்டர்களை மக்களை சந்திக்க தடை போட நீங்க யாரு.. சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறேன். 

    meeting

    அதேபோல நேத்து வந்தவன் எல்லாம் முதலமைச்சர்  கனவு காண்றான் என்று பேசுகிறார்கள். வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு நெருக்கடி இல்லாத போது எதற்காக எங்க கட்சிக்கு மட்டும் இவ்வளவு நெருக்கடி தருகிறீர்கள்.. அணை போட்டு ஆத்த தடுக்கலாம், காத்த தடுக்க முடியாது.. அது சூறவாளிய மாறும், ஏன் சக்திமிக்க புயலாக் கூட மாறும். 

    இந்த மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண.. சமத்துவத்திற்கான மண்.. ஒவ்வொரு நாளும் வரக்கூடிய செய்திகளைப் பார்த்து மனஉளைச்சல் ஏற்படுகிறது. சட்டம், ஒழுங்கு முற்றிலும் சரியில்லை. இதற்கு கரெப்ஷ்ன் கபடதாரிகள் தான் காரணம். உண்மையான மக்களாட்சி மலரணும் அதுக்கு இவங்கள மாத்தணும். 

    meeting

    தவெக நிர்வாகிகளே, தொண்டர்களே.. நாள்தோறும் மக்களைப் பாருங்க, பேசுங்க, அவங்க பிரச்னை என்ன என்று தெரிஞ்சுக்கோங்க. தெருத்தெருவா போங்க, வீடுவீடா போங்க. அவங்க மனசுல ஆழமான நம்பிக்கையை விதைக்கணும். அப்புறம் தலைநிமிர்ந்து பாருங்க, வீட்டு உச்சில நம்ம கட்சியோட இரட்டைபோர்யானை வாகைமலர்க்கொடி பறக்கும்..

    மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே..உங்கடள் ஆட்சியைப் பற்றிக் கேள்வி கேட்டா ஏன் கோவம் வருது. பெண் பாதுகாப்பு எங்க இருக்கு... சட்டம் ஒழுங்கு சரியா இருந்தா பாதுகாப்பு இருக்கும். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியல சார். இதுல வேற உங்கள அப்பானு கூப்டுறாங்கனு சொல்றீங்க.. இந்த கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களால தான் இந்த ஆட்சி முடிவுக்கு வரப்போகுது. உங்க அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகுது.. 

    meeting

    பரந்தூர், ஜாக்டோ-ஜியோ, போதைப்பொருள் எதிர்ப்பு, போக்குவரத்துத் தொழிலாளர், மீனவர் போராட்டம், சாதிவாரி கணக்கெடுப்புக் கோரிக்கை, சாம்சங் தொழிலாளர்கள், டங்கஸ்டன் சுரங்கம், விவசாயிகள், மின்கட்டண எதிர்ப்பு, இஸ்லாமிய அமைப்பினர், செவிலியர்கள், மருத்துவர்கள் என்று இந்த ஆட்சியில் எவ்வளவு போராட்டங்கள். இன்னும் கூட சொல்ல முடியும். உங்கள் எல்லா போராட்டங்களிலும் தவெக உடன் நிற்கும். 

    இங்க அங்க, அங்க அவங்க அப்படி. திமுகவோட சீக்ரெட் ஓனர்.. மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களே உங்க பேரை சொல்றதுக்கு பயம் மாதிரி சொல்றாங்க.  சென்டர்ல ஆள்றவங்கனு சொல்றோம். சென்டர்ல காங்கிரசா ஆளுது. ஸ்டேட்ல ஆள்றவங்கனு சொல்றோம். இங்க அதிமுகவா ஆளுது.  பெயரைச் சொல்லணும் என்று கேட்டீங்கல, இந்தா வச்சிக்கோங்க.. 

    meeting

    ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளை அடிக்க மறைமுக பாஜகவுடன் அரசியல் கூட்டணி உங்க பேரை சொல்லி கரெப்ஷன் கபடதாரிகள் தமிழ்நாட்டை சூறையாட்றாங்க. ஏன் ஜி, தமிழ்நாடு என்றால் அலர்ஜி...ஜிஎஸ்டி வாங்குறீங்க, ஆனால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தரமாட்றீங்க. மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நீங்க அறிவிச்சப்பவே உங்க ப்ளான் என்னன்னு புரிஞ்சுடுச்சு. தமிழ்நாட்டுக் கிட்ட கொஞ்சம் கேர்புல்லா ஹாண்டில் பண்ணுங்க. பலபேருக்கு தண்ணி காட்டுன ஸ்டேட்னு மறந்துடாதீங்க. 

    meeting

    உண்மையான மக்களாட்சி  என்னன்னு தவெக தரும். அதிகாரபகிர்வுடன் கூடிய ஆட்சி. பெண்கள் பாதுகாப்பை 100 சதவிதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை ஸ்ட்ரிக்டா வச்சி இருப்போம், கல்வி-மருத்துவம் எளிதில் கிடைக்கும். அதுவும் சமநீதியா தருவோம். அரசு ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துணையா நிற்போம். தவெக எப்போதும் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம் தான். நம்ம நடு விவசாய பூமி, இயற்கைவளம் கொண்ட நாடு. இங்க இயற்கை வளத்துக்கு எதிரா எந்த திட்டத்தையும் கொண்டு வர்றத ஏற்க முடியாது. அப்படி பாதிக்கப்படும்படியா கொண்டு வர்ற திட்டங்களை எதிர்ப்போம்.  இது எங்கள் உரிமை, கடமை, கொள்கை.

    meeting

    சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண் ஆளுமைகளை, கொள்கைத் தலைவர்களாக வைத்துள்ள ஒரே கட்சி தவெக. எதிர்வரும் தேர்தலில் மக்கள் சக்தியின் உதவியுடன் நல்லரசு அமைப்பது உறுதி. பகல் கனவு காண்பதாக சொல்வார்கள். காற்று,மழை ,வெய்யிலை யாரால் தடுக்க முடியும்.. கடவுளால் உருவாக்கப்பட்டடவை. யாராலும் என்னைத் தடுக்க முடியாது. அரசியல் சுனாமியை தடுப்பார் எவர்? தடுக்க நினைக்கும் கனவு மெய்ப்படாது.. 

    எதிர்வரும் 2026 வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டி. ஒன்று TVK மற்றொன்று DMK. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். 

    இவ்வாறு விஜய் பேசினார்.
     
    இதையும் படிங்க: மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே… மு.க.ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்த விஜய்..!

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share