தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரைப்பத்தியில் ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெற உள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்புமுனையாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கருத்தில் கொண்டு காவல்துறை பரிந்துரையின் பேரில் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பாரைப்பத்தியில் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கப்படுகிறது. சுமார் 20 முதல் 50 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாநாட்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ வசதிகளுக்காக 400 மருத்துவ குழுக்கள், தனி ஆம்புலன்ஸ் பாதை, குடிநீர், சுகாதாரம், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை தயாராகி வருகின்றன. மேலும், ட்ரோன் மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளன.
நாளை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஊர் முழுவதும் பிளக்ஸ் வைப்பது, பேனர் கட்டுவது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல்குளத்தில் நாளை நடைபெற இருக்கும் விஜய் மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக கம்பி எடுத்து வந்த போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்பா!! உங்களை கனவை நிறைவேற்றுவதே எனது குறிக்கோள்!! ராகுல் உருக்கம்!!
இதையும் படிங்க: அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அன்பு முத்தங்கள்! பெற்றோரின் திருமண நாளில் உதயநிதி உருக்கம்