தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இரண்டு ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஐந்து தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர் பதவியை கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நியமனம் செய்யப்படாமல் இருந்த தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது திருச்சியில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளும் இன்று அறிவிக்கப்பட உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் காலியாக உள்ள பதவிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சிப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண் பொறுப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து பெண் தொண்டர்கள் அதிருப்தியில் பனையூருக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக பெண் பவுன்சர்கள் பனையூரில் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து சுஜாதா ஆக்னல் என்ற தற்போதைய தூத்துக்குடியின் நிர்வாகியின் பெயர் லிஸ்டில் இல்லை என்ற தகவல் வெளியானதாக தெரிகிறது.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி? நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... முக்கிய ஆலோசனை...!
இதனால் பனையூர் அலுவலக வளாகத்தில் கண்ணீருடன் பெண் நிர்வாகி காத்துக்கொண்டு இருந்து வருகிறார். பொறுப்பாளர்கள் பெயரில் தமது பெயர் இல்லை என்பதை அவர் அறிந்துள்ளதாகவும் இதனால் முறையிட்டு நியாயம் கேட்க காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கட்சிக்காக தாங்கள் அதிக அளவில் உழைத்து உள்ளதாகவும் ஆனால் பொறுப்பு வழங்கும்போது இவ்வாறு செய்வது நியாயமா என்றும் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே ஸ்ட்ரோக்- ல ஆட்சிக்கு வருவாராம்... நடக்குற காரியமா? விஜயை வறுத்தெடுத்த திருமா..!