திமுக 2021-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் மாநிலம் முழுவதும் வேகமாக அதிகரித்துள்ளதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்தப் பழக்கம் பரவி வருவதால், அவர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும், சமூகத்தில் பாதுகாப்பின்மை உருவாகியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
போதைப்பொருள் கட்டுப்பாடு அரசின் பொறுப்பு என்பதை வலியுறுத்தி, திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சாடினார். தமிழகத்தில் நடக்கும் பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வரும் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்துவதாக தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிப்பாக தான் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொண்டாட்டியவே காப்பாத்தல... மக்களை காப்பாற்றுவாரா? தவெக ரஞ்சனா கடும் தாக்கு..!!
அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்ணியம் பேசும் விஜயிடம் கண்ணியம் இருக்கா? - கட்சிக்குள் இருந்தே விஜய்க்கு வந்த ஸ்ட்ராங் வார்னிங்...!