பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் டெபாசிட் இழப்பார் என சத்தியமங்கலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில் " தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் எத்தனை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார் என்பது எனக்கு தெரியும். அவர் இன்றைக்கு எங்களைப் பார்த்து சவால் விடுகிறார். ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்கிறார். நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் எங்கு போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதை நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.
இதையும் படிங்க: நல்லது நினைச்சிருந்தா தமிழ்நாடு நாசமாகி இருக்குமா... சாடிய நயினார்...!
அவர் எங்கு நிற்கலாம் என தொகுதியை தேடிக் கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நிக்கச் சொல்லுங்கள். நான் நிக்க வில்லை என்றும், வேறு தொகுதியை தேடிக் கொண்டிருக்கிறார்.
இளைய தளபதி விஜய் தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்பார். வெற்றி பெறுவார். ஈரோட்டில் நடைபெற உள்ள கூட்டத்தில், பல கட்சிகளில் இருந்து, சாரை சாரையாக வந்து, எங்கள் கட்சியில் சேரப் போகிறார்கள். இதை அனைவரும் கண்கூடாக பார்க்கப் போகிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: நீதிக்கே வாய்ப்பூட்டு... மிரட்ட நினைக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி... நயினார் கடும் விமர்சனம்..!