திருப்பூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் மக்களே, வரும் 16ஆம் தேதி தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட இருப்பதாக தெரிவித்தார். அதற்கு முன்னதாக சில வரிகளை இங்கு கூற இருப்பதாகவும் தெரிவித்தார். நெசவாளர்கள் சிறு குறு நடுத்தர தொழில்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் சம்பந்தமான நம்முடைய வாக்குறுதிகளை கூறுவதாக தெரிவித்தார்.
நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்காக அரசுக்கு சொந்தமான ஒரு உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். முக்கிய நகரங்களில் வெற்றி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். நிலையற்ற நூல் விலை மற்றும் மின்சார நெருக்கடி சுமையை பகிர்ந்து கொள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர்கள் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வங்கி மூலம் நேரடியாக தமிழக அரசு வழங்கும். கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட் ஆகவும், விசைத்தறி இலவசம் மின்சாரம் 1500 யூனிட்டுகளாகவும் உயர்த்தப்படும். நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைப்பதற்காக அவர்கள் வழங்கும் நூல் சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றுக்கு நமது தமிழக வெற்றிக்கழக அரசால் 50% மானியம் வழங்கப்படும்.
நமது தமிழக வெற்றிக்கழக அரசில் 10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சி இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புகளை உருவாக்கும் துறை தான் எம்எஸ்எம்இ-ல் இந்தியாவில் அதிகமான எம் எஸ் எம் இருக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. ஆனால் இப்படிப்பட்ட இந்த பெருமைக்கு மிகவும் பெருமை சேர்த்தது யார் தெரியுமா என்றும் அதிக MSME நிறுவனங்கள் மூடப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடம் தமிழ்நாடு என்று தெரிவித்தார். இதற்கு காரணம் திமுக அரசு என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வாட்டி எடுக்கும் வெயில்..! விஜய்க்காக காத்திருந்த சூலூர் வேட்பாளர் மயக்கம்..!!
குரு சிறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக தமிழக வெற்றிக்கனக அரசு என்ன செய்யும் என்று பார்க்கலாம் என்று கூறினார். நெருக்கடியில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூபாய் 15,000 கோடி ஃபண்டு உருவாக்கப்படும். விரிவான ஆய்வுக்குப் பிறகு மின்கட்டணத்தை முறைப்படுத்த குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு 100% மின்சார வரி விலக்கு பெறும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலகளவில் போட்டி போடுவதை உறுதி செய்வதற்காக அவற்றை நவீன மயமாக்க ஒரு யூனிட்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை என்ற அளவில் 35 சதவீத நேரடி மூலதன மானியத்தை நமது டி வி கே அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.8000 கூப்பன் மாதிரி..! தவெக - திமுகவினர் இடையே கைகலப்பு..! கும்பகோணத்தில் பரபரப்பு..!!