எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த சர்க்கஸ் அரசாங்கம் அவரை கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தவெகவினரின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்திகளை திசைதிருப்பவும் இந்த நடவடிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலில் விமர்சனங்களும் ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை என்பதை வலியுறுத்திய அவர், அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது கடைந்தெடுத்த பாசிசம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சியா.? போதைப்பொருள் கூடாரமா.? செய்தியாளர்களுக்கு மிரட்டல்..! உதயநிதி கண்டனம்.!!
இந்த ரீல்ஸ் முதலமைச்சர் பாஜகவின் கார்பன் காப்பியாக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயக மதிப்புகளைப் பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் இந்த கண்டனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: முதல்வன் சொன்னாலே ஸ்டாலின் தான் ஞாபகம் வருதோ.? CHEAP CM..! விளாசிய உதயநிதி.!!